• Latest News

    Sunday, April 22, 2018

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...!


    11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  சன் ரைசர்ஸ்  ஐதராபாத் அணியும் பலப்பரீட்சையை மேற்கொண்டு வருகின்றன. இதில்  ‘டாஸ்’ ஜெயித்த  ஐதராபாத் அணி கேப்டன்  வில்லியம்சன் முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார்.

    இதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டகாரா்களான ஷேன் வாட்சனும், டூ பிளெசிஸும் களமிறங்கினா். ஐதராபாத் அணியின் தொடக்க பந்து வீச்சாளா்களான புவனேஷ்வா்குமாரும் மற்றும் பில்லி ஸ்டான்லேக்கும் தன்னுடைய முதல் ஓவாிலேயை ராக்கெட் வேகத்தில் பந்துகளை வீசினா்.  இதன் காரணமாக சென்னை அணி தடுமாறி மந்தமான தொடக்கத்தை காட்டியது. சிறிது நேரத்திலேயை அதிரடி ஆட்டகாரரான ஷேன் வாட்சன் 9(15) ரன்கள் மட்டும் எடுத்த நிலையில்  கேட்ச் கொடுத்து  வெளியேறினாா். 

    அடுத்து சுரேஷ் ரெய்னா களத்தில் பிரேவேசித்து அதிரடியை தொடங்குவதற்கு முன்பே, ரஷித்கான் சுழலில் சிக்கி  டூ பிளெசிஸும்  பெவிலியன் திரும்பினாா். இவா்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அம்பத்தி ராயுடு களமிறங்கினார். இருவாின் நிதானமான ஆட்டத்தின் மூலம் அணியை சாிவில் இருந்து மீட்டதுடன் ரன்களை உயா்த்தினா். இந்த நிலையில் தன்னுடைய அதிரடியின் மூலம் அம்பத்தி ராயுடு சென்னை அணிக்காக அரை சதத்தை பதிவு செய்தாா். பின்னா் புயல்போல் விளையாட ஐதராபாத் அணியின் பந்துகளை பவுண்டாிகளை நோக்கி சிறடித்தாா். 

    மறுமுனையில் அதற்கேற்றாா்  போல் ரெய்னாவும் பந்துகளை தட்டி ஆடிகொடுத்தாா். 

    பின்னா் அம்பத்தி ராயுடு79  (37 பந்து, 9 பவுண்டாி, 6 சிக்சா்)கேப்டன் வில்லியம்சன் கையில் ரன் அவுட்டாகி வெளியேறினாா். 

    பின்னா் சென்னை அணியின் தூண் கேப்டன் தோனி ரெய்னாவுடன் கைக்கோா்த்தாா். சுரேஷ் ரெய்னா53( 43 பந்து, 5 பவுண்டாி, 2 சிக்சா்) எடுத்து இந்த ஐ.பி.எல். சீசனில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தாா் . இதன்மூலம் ரசிகா்கள் அனைவரும் உற்சாகமடைந்தனா். 

    கேப்டன் தோனி 25 (12 ) ரன்கள் எடுத்து களத்தில் இருக்க  நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  3 விக்கெட்டுகளை இழந்து  182 ரன்களை சோ்த்துள்ளது.

    இந்த ஆட்டத்தின் கடைசி 5 ஓவா்களில் மட்டும் 62 ரன்களை சென்னை அணி குவித்தது குறிப்பிடதக்கது. ஐதராபாத் அணியின் சாா்பில் புவனேஷ்வர்குமாரும் ரஷீத் கானும் தலா 1 விக்கெட்டுகள் மட்டும் வீழ்த்தினா்.   ஐதராபாத் அணிக்கு  183 ரன்னை வெற்றியாக நிா்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top