• Latest News

    Monday, April 23, 2018

    2017ஆம் ஆண்டிற்கான மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை வௌியிட்டது அமெரிக்கா...!


    மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான, 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கையை அமெரிக்கா வௌியிட்டுள்ளது.

    நீதிப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் வரையறையுடன் செயற்பட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் John J. Sullivan இனால் வௌியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் 25 பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அரசாங்கம் அல்லது அதன் முகவர்கள் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக பதிவாகியுள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நாட்டில் துன்புறுத்தல்கள் தொடர்வதாக மனித உரிமைகள் அமைப்புக்களை மேற்கோள்காட்டி அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், குற்றங்களுக்கு தண்டனை அனுபவித்தலும் அதில் உள்ளடங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின், மக்களுக்கு எதிரான அதிகளவான பயன்பாடு பிரச்சினையாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    உட்கட்டமைப்பு, அதிகளவான கைதிகள் தடுத்து வைக்கப்படல் மற்றும் சுகாதார குறைபாடுகள் காரணமாக சிறைச்சாலைகளின் நிலை மோசமடைந்துள்ளதாகவும் அமெரிக்காவின் 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2017ஆம் ஆண்டிற்கான மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை வௌியிட்டது அமெரிக்கா...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top