• Latest News

    Sunday, April 22, 2018

    குழந்தைகள் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை; அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்...!


    காஷ்மீரின் கதுவா நகரில் சமீபத்தில் 8 வயது சிறுமி பலரால் கடத்தி செல்லப்பட்டு கூட்டாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    நாட்டில் சிறுமிகள் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தின.

    இந்த நிலையில், மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது.  இந்த கூட்டத்தில், குற்றப்பிரிவு சட்டம், சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்து அதை அவசர சட்டமாக பிறப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்த அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ள இந்த அவசர சட்டத்தில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் விசாரணை குறித்தும் விரிவாக கூறப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.  இதனை தொடர்ந்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குழந்தைகள் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை; அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top