• Latest News

    Tuesday, April 24, 2018

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச். புஷ் மருத்துவமனையில் அனுமதி...!


    வாஷிங்டன்,
    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் எச். புஷ் (வயது 93).  இவரது மனைவி பார்பரா புஷ் தனது 92வது வயதில் கடந்த செவ்வாய் கிழமை மரணம் அடைந்தார்.
    அமெரிக்க ஜனாதிபதிகளில் 73 வருடங்கள் நீண்ட காலம் வாழ்ந்த தம்பதி என்ற பெருமையை பெற்ற இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.
    இந்த நிலையில், ஜார்ஜ் எச். புஷ் உடல் நல குறைவால் ஹூஸ்டன் நகரில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு ரத்தத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச். புஷ் மருத்துவமனையில் அனுமதி...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top