• Latest News

    Friday, April 20, 2018

    ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை வலுவான தொடக்கம், ஷேன் வாட்சன் அபார ஆட்டம்...!


    11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் மராட்டிய மாநிலம் புனேயில் இன்று நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் கோதாவில் இறங்கி உள்ளன. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரெகானே பந்துவீச்சை தேர்வுசெய்தார். 


    இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வாட்சன் சிக்சர் அடித்து சென்னை அணியின் ரசிகர்களை தொடக்க முதலே ஆட்டத்தை ரசிக்க செய்தார். 


    4.3 வது ஓவரில் சென்னை அணி 50 ரன்களை எடுத்து இருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது. அம்பத்தி நாயுடு 12 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து வாட்சனுடன், களமிறங்கிய சுரேஷ் ரெய்னா அவசரம் காட்டாமல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணிக்கு வலுவான தொட்டத்தை அமைக்க உதவினார். சென்னை அணியின் வீரர் ஷேன் வாட்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 


    வெற்றிகரமாக சென்ற கூட்டணியை ராஜஸ்தான் உடைத்தது. சுரேஷ் ரெய்னா 46 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வாட்சன் 70 ரன்களுடனும் களத்தில் உள்ளார். சென்னை அணி 11.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 131 ரன்களுடன் விளையாடி வருகிறது.


    சென்னை அணி ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை வலுவான தொடக்கம், ஷேன் வாட்சன் அபார ஆட்டம்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top