• Latest News

    Thursday, April 19, 2018

    இலங்கையின் குளத்தை மையமாகக் கொண்ட நீர்ப்பாசனத் திட்டத்திற்கு சர்வதேச விருது...!


    இலங்கையின் குளத்தை மையமாகக் கொண்ட நீர்ப்பாசனத் திட்டத்திற்கான சர்வதேச விருது சற்று முன்னர் இத்தாலியின் ரோம் நகரில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கமைய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 14 விவசாய முறைமைகளில் ஆற்றுப்படுகை திட்டமும் தற்போது உள்வாங்கப்பட்டுள்ளது.

    இலங்கையின் உலர் வலயத்தில் காணப்படுகின்ற ஆற்றுப்படுகையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் ஆற்றுப்படுகை திட்டத்தை ஏற்றுக்கொண்டதுடன், கடந்த வாரமளவில் அதனை உலக மரபுரிமையாக அங்கீகரிப்பதற்கு தீர்மானித்திருந்தது.

    இலங்கை விவசாய அமைச்சின் செயலாளர் இந்த விருதினைப் பெற்றுக்கொண்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையின் குளத்தை மையமாகக் கொண்ட நீர்ப்பாசனத் திட்டத்திற்கு சர்வதேச விருது...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top