• Latest News

    Friday, April 20, 2018

    அரியவகை தாது அடங்கிய தீவு ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு...!


    ஜப்பானின் டோக்கியா நகரின் தென்கிழக்கில் 1,150 மைல்கள் தொலைவில் உள்ளது மினாமி தொரிசிமா ஜப்பான் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த தீவின் தற்போதைய மதிப்பு சுமார் 360 பில்லியன் பவுண்ட்ஸ் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


    ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்பானது ஜப்பானுக்கு திருப்புமுனையாக அமையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


    குறித்த தீவில் சுமார் 16 மில்லியன் டன் அரியவகை உலோகங்கள் கொட்டிக் கிடப்பதாக ஜப்பான் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த உலோகங்களால் உலகமெங்கும் ஹைடெக் தயாரிப்புகள் பல உருவாக்க முடியும் எனவும் ஜப்பானிய நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


    அது மட்டுமின்றி ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள், ரேடார் சாதனங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் என பலவற்றையும் குறித்த தீவில் இருந்து கிடைக்கும் உலோகங்களால் உருவாக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட அரிய உலோகங்களில் ஒன்று இயிற்றியம் (Yttrium). இதன் தற்போதை சந்தை மதிப்பானது பவுண்ட் ஒன்றுக்கு 3,400 டாலராகும். இயிற்றியம் உலோகத்தால் மொபைல்போன் திரைகள் மற்றும் கேமிரா லென்ஸ்கள் தயாரிக்கலாம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரியவகை தாது அடங்கிய தீவு ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top