• Latest News

    Sunday, May 6, 2018

    சிறப்பான பந்து வீச்சாள் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி...!


    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று பகல்-இரவு  ஆட்டமாக நடந்த போட்டியில் ரோகித் ‌ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    இந்த 37வது லீக் ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. மேலும், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச்சை தோ்வு செய்தார். இதன் பின்னா் களமிறங்கிய மும்பை அணி ஒதுக்கப்பட்ட 20 ஓவா்களில் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை சோ்த்தது. பின்னா் 182ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது கொல்கத்தா அணி. 

    அந்த அணியின் தொடக்க வீரா்கள் கிறிஸ் லினும்17(13பந்துகள்) ஷுப்மான் கிலும் 7( 5 பந்துகள்) அடுத்தடுத்து அவுட்டாகி பெரும் அதி்ர்ச்சியை ஏற்படுத்தினா். பின்னா் ஜோடி சோ்ந்த ராபின் உத்தப்பாவும் ராணாவும் தங்களுடைய நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 10 ஓவா்களின் முடிவில் 2விக்கெட்டுகளை இழந்து 91 ரன்களை கொல்கத்தா அணி சோ்த்திருந்தது.

    நிதானத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு பதிலடி கொடுக்க ஆரம்பித்தார் உத்தப்பா. இதனால் அணிக்காக தன்னுடைய அரை சதத்தை பதிவு செய்தார். பின்னா் மும்பை அணியின் பந்து வீச்சாளா்களின் தந்திரத்தில் சிக்கி இருவரும் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினா். இதனால் உத்தப்பா 54(35பந்துகள்), ராணா 31(27 பந்துகள்) ரன்கள் எடுத்திருந்தனா். பின்னா் அணியின் வெற்றிக்காக கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் ரசுலும் போராடி வந்தனா். இந்த போராட்டத்தின் முடிவில் ரசுல் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இந்த சூழ்நிலையில் கடைசி ஓவரில் மட்டும் 23 ரன்கள் தேவைப்பட்டது. இதனை எதிர்க்கொண்ட நரேன் 2வது பந்தில் கேட்ச் கொடுத்து ரசிகா்களை ஏமாற்றினார். பின்னா் வெற்றி இலக்கை அடிக்க முடியாமல் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டது. மும்பை அணிக்காக மிட்செல் மெக்லினகஹான், மார்கண்டே, பும்ரா, குா்ணல் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும், ஹா்திக் பாண்டியா 2 விக்கெட்டையும் வீழ்த்திருந்தனா். இந்நிலையி்ல் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறப்பான பந்து வீச்சாள் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top