• Latest News

    Thursday, May 3, 2018

    தோனி அசத்தல்; சென்னை அணி 177 ரன்கள்...!


    கோல்கட்டா: கோல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்தது. 

    இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. கோல்கட்டாவில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கோல்கட்டா அணியில் ராணாவுக்குப்பதில் ரின்கு சிங் வாய்ப்பு பெற்றார். 



    தோனி அசத்தல்:
    சென்னை அணிக்கு வாட்சன் (36), டுபிளசி (27) சிறப்பான துவக்கம் தந்தனர். குல்தீப் பந்தில் ரெய்னா (31) ஆட்டமிழந்தார். நரைன் 'சுழலில்' ராயுடு (21) சிக்கினார். ஆனால், கேப்டன் தோனி தனி வீரராக அசத்தினார். மாவி, ஜான்சன் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார். ஜடேஜா 12 ரன்களில் திரும்பினார். முடிவில், சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. தோனி (43) அவுட்டாகாமல் இருந்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தோனி அசத்தல்; சென்னை அணி 177 ரன்கள்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top