• Latest News

    Thursday, May 3, 2018

    சிரியாவில் ரஷிய போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழப்பு...!


    உள்நாட்டுபோர் நடந்துவரும் சிரியாவில் அதிபர் ஆசாத் படைகளுக்கு ஆதரவாக ரஷிய படைகளும் களத்தில் குதித்து உள்ளன. குறிப்பாக அதிபர் எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்க பகுதியில் வான்தாக்குதல்களை ரஷிய படைகள் நடத்தி வருகின்றன. சிரியாவிற்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை மேற்கொள்ள சென்ற ரஷியா உள்நாட்டு போரில் குண்டுகளை வீசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 


    சிரிய படைகள் நடத்தும் விஷவாயு தாக்குதலில் பெண்கள், சிறார்கள் என மக்கள் கொடூரமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் நேரிட்டு வருகிறது. 


    இந்நிலையில் சிரியாவில் ரஷிய போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். 


    சிரியாவின் ஹெமிம் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற ரஷிய போர் விமானம் சிறிது நேரத்திலேயே மத்திய தரைக்கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தின் 2 விமானிகளும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் தீப்பிடிக்கவில்லை என்றும், என்ஜினில் பறவை ஒன்று விழுந்ததுதான் விபத்துக்கு காரணம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளதாக ரஷிய ராணுவ அமைச்சகம் கூறுகிறது. இந்த விபத்தில் 2 விமானிகள் இறந்ததை தொடர்ந்து சிரியாவில் ரஷிய படையினரின் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்து உள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிரியாவில் ரஷிய போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழப்பு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top