• Latest News

    Thursday, May 3, 2018

    எதிர்வரும் 5 ஆம் திகதி வரை புதிய களனி பாலத்தில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது...!


    இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை புதிய களனி பாலத்தில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    புதிய களனி பாலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

    இதனால் கொழும்பு – கண்டி வீதியில் பயணிக்கும் வாகனங்கள் கொழுப்பிலிருந்து வெளியேரும் போதும் உட்பிரவேசிக்கும் போதும், களனி சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எதிர்வரும் 5 ஆம் திகதி வரை புதிய களனி பாலத்தில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top