• Latest News

    Saturday, May 5, 2018

    74 ஆவது பிரெட்பி கேடயத்தை சுவீகரித்தது ரோயல் கல்லூரி...!


    கண்டி திரித்துவக் கல்லூரிக்கு எதிரான பிரெட்பி கேடயத்தின் இரண்டாம் கட்டத்தில் 27-19 எனும் கணக்கில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.

    கொழும்பில் கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற முதற்கட்டத்தில் 39 -7 எனும் புள்ளிகள் பிரகாரம் ரோயல் கல்லூரி முன்னிலை பெற்றது.

    இரண்டு கட்டங்களின் முடிவில் 66 -26 எனும் கணக்கில் வெற்றியீட்டிய ரோயல் கல்லூரி அணி, 74 ஆவது பிரெட்பி கேடயத்தை சுவீகரித்தது.

    ரோயல் கல்லூரி அணி பிரெட்பி கேடயத்தை சுவீகரித்த 33 ஆவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 74 ஆவது பிரெட்பி கேடயத்தை சுவீகரித்தது ரோயல் கல்லூரி...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top