• Latest News

    Tuesday, May 29, 2018

    சோமாலிலாந்தில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை...!


    இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்று சோமாலிலாந்தில் நிர்க்கதிக்குள்ளான தொழிலாளர்கள் 12 பேரை நாட்டுக்கு அழைத்து வர வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

    தொழிலாளர் பிரச்சினையால் குறித்த 12 பேரும் நிர்க்கதிக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலயத்தின் ஒருங்கிணைப்பில் 12 தொழிலாளர்களும் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

    இலங்கையின் தூதுவராலயங்கள் அல்லது உயர்ஸ்தானிகராலயங்கள் அமைந்திராத நாடுகளுக்கு பணிக்கு செல்லும் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு வௌிநாட்டலுவல்கள் அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சோமாலிலாந்தில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top