• Latest News

    Saturday, May 26, 2018

    கிளிநொச்சியில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...!


    கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    வழித்தட பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளார்கள் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவர் நாகராஜா நகுலராஜா குறிப்பிட்டார்.

    தமது கோரிக்கையையும் மீறி வலைப்பாடு கிராமத்திற்கும் வவுனியாவிற்கும் இடையில் பஸ் ஒன்றை வட மாகாண போக்குவரத்து அதிகார சபை சேவையில் அமர்த்தியுள்ளதாக அவர் கூறினார்.

    இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நாகராஜா நகுலராஜா தெரிவித்தார்.

    கிளிநொச்சி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் தொடர்பில் வட மாகாண போக்குவரத்து அதிகார சபை எதேச்சாதிகாரமாக செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் அருளானந்தம் நிகோலஸ் பிள்ளையிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

    மக்களின் கோரிக்கைக்கு அமையவே வலைப்பாடு கிராமத்திற்கான போக்குவரத்து வழித்தடம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் பதிலளித்தார்.

    கிளிநொச்சி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்களின் பகிஷ்கரிப்பு நியாயமற்றது எனவும் அருளானந்தம் நிகோலஸ் பிள்ளை தெரிவித்தார்.

    தனியார் பஸ் உரிமையாளர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிளிநொச்சியில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top