• Latest News

    Thursday, May 24, 2018

    மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு...!


    நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    நேற்று மெனிக் சந்தையில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மெனிக் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார்.

    மலையகப்பகுதிகளில் மரக்கறிகளின் விலை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

    தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top