• Latest News

    Saturday, June 9, 2018

    கத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...


    கடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுகளில் கல்விகற்று வெளியேறிய நண்பர்களை ஒன்றினைக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட முதலாம் வருட இப்தார் வைபவமும் இராப்போஷன நிகழ்வும் நேற்று மாலை (06-08-2018) டோஹா நஜ்மா (DOHA - NAJMA) வில் அமைந்துள்ள லக்பிம ரெஸ்டோரென்ட் (LAKBIMA RESTAURANT) இல் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. 


    இந்நிகழ்வில் கத்தாரில் பணிபுரியும் சுமார் 30ற்கு மேற்பட்ட நண்பர்கள் கலந்து சிறப்பித்ததுடன் இவ் ஆத்மார்த்தமான நிகழ்வின் உன்னதமான நோக்கமும் சபையோருக்கு எத்திவைக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் ஸாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ஸஹிரியன்ஸ் (ZAHIRIANS) ஆகிய எம்மால் இத்தாய்க்கு ஆற்றவேண்டிய சேவைகள் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வு ஸலவாத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

    நிகழ்வை சிறப்புர நடாத்த உடலாலும், பொருளாலும், நேரத்தாலும் உதவி புரிந்த நண்பர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டுக்குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


    ஜஸாகுமுல்லாஹு ஹைரன்...

    குறிப்பு: 

    இன்று (09-06-2018) கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (A/L) மற்றும் 2013 (A/L) கல்வியாண்டு நண்பர்களுக்கான மூன்றாம் வருட இப்தார் நிகழ்வும் ஒன்று கூடலும் பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

    இவ்வண்ணம்

    ஏற்பாட்டுக் குழு.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்... Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top