• Latest News

    Saturday, June 2, 2018

    5 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி...!


    இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக கடந்த 29–ந்தேதி புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். 

    முதற்கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பினரிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது. 

    இந்தோனேசியா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றார். அங்கு செல்லும் வழியில் மலேசியாவில் சிறிது நேரம் அவர் ஓய்வு எடுத்தார். அவரை மலேசிய துணை பிரதமர் டாக்டர் வான் அஜிஜா வரவேற்றார். பின்னர் சிங்கப்பூர் பிரதமர் மகாதீர் முகமதுவை, மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது 92 வயதான மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றதற்கு, மோடி வாழ்த்து தெரிவித்தார். 

    இருநாட்டு தலைவர்களும் ராஜ்ஜிய ரீதியிலான ஒத்துழைப்பு வலுப்படுத்துவது குறித்து பேசினர். பிரதமர் பதவி ஏற்ற பிறகு மகாதீர் முகமதுவை சந்திக்கும் முதல் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சிங்கப்பூர் வர்த்தக மையத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவர் தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்டார். 

    இதையடுத்து பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றார். நேற்று அவர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் மோடி ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பின் போது 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தநிலையில், 5 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்தியா புறப்பட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 5 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top