• Latest News

    Monday, June 18, 2018

    கொலம்பிய ஜனாதிபதித் தேர்தலில் இவான் டுகே வெற்றி...!


    கொலம்பியாவின் ஜனாதிபதித் தேர்தலில் இவான் டுகே வெற்றி பெற்றுள்ளார்.

    கொலம்பியாவில் முதற்கட்ட ஜனாதிபதித் தேர்தல் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி நடைபெற்றது.

    இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 53 தசம் 9 சதவீதமான வாக்குகளைப் பெற்று இவான் டுகே வெற்றி பெற்றுள்ளார்.

    டெமோகிரடிக் சென்டர் கட்சியின் மூலம் புதிதாக அரசியலில் நுழைந்தவரான இவான் டுகே கொலம்பியாவின் புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட கஸ்டவோ பெட்ரோவினால் 41 தசம் 8 சதவீதமான வாக்கு களையேப் பெறமுடிந்தது.

    நேற்று நடைபெற்ற தேர்தலில் சுமார் 36 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பத்தாயி ரத்துக்கும் அதிகமான வாக்காளர் நிலையங்களில் வாக்களித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொலம்பிய ஜனாதிபதித் தேர்தலில் இவான் டுகே வெற்றி...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top