• Latest News

    Thursday, June 21, 2018

    தபால் தொழிற்சங்கத்தினருக்கும் தபால்மா அதிபருக்கும் இடையில் பேச்சுவார்த்தை...!


    பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினருக்கும் தபால்மா அதிபருக்கும் இடையில் இன்று மற்றுமொரு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

    பணிப்பகிஷ்கரிப்புக்கு முக்கியமான காரணமான, சேவையில் இணைத்துக் கொள்வதற்கான கொள்கையினூடாக சம்பள தரத்தினை நிர்ணயிப்பது குறித்து இன்றைய பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

    தமக்கான இறுதித் தீர்வு வழங்கப்படும் வரை பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார, கடந்த 11 நாட்களாக தமது போராட்டம் தொடர்வதாகவும் கூறினார்.

    இவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்தில் சுமார் 15 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளதாகவும் சிந்தக பண்டார மேலும் குறிப்பிட்டார்.

    அதேநேரம், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக முழு தபால் சேவைகளும் ஸ்தம்பிதமடைந் துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

    இதனையடுத்து, பட்டியல் கட்டணங்களை செலுத்துதல், ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட அனைத்த செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தபால் தொழிற்சங்கத்தினருக்கும் தபால்மா அதிபருக்கும் இடையில் பேச்சுவார்த்தை...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top