• Latest News

    Wednesday, July 4, 2018

    ரயில்வேயில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்பப்படும் அஸ்வனி லோகானி...!


    சமீப காலமாக மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன, வரும் மக்களவைத் தேர்தலை 2019க்கு முன்பாக நடத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதோடு, புதிய பணியிடங்களையும் உருவாக்கி வேலைவாய்ப்பை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

    இந்தநிலையில் ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோகானி செய்தியார்களிடம் கூறியதாவது:

    ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களை 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்பப்படும். ரயில்வேயில் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களுக்காக 2 கோடியே 27 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

    செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உடல்தகுதித்தேர்வு மற்றும் உளவியல் தேர்வு நடத்தப்படும். 

    மேலும் 2019-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பணி நியமனம்  நடைபெறும். ரயில்வே தேர்வுகள் இந்தி, ஆங்கிலம், உருது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட 15 மொழிகளில் நடைபெறும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரயில்வேயில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்பப்படும் அஸ்வனி லோகானி...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top