• Latest News

    Sunday, July 1, 2018

    பென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரேமாதிரி வரி ஜிஎஸ்டியில் முடியாது காங்கிரஸ் கோரிக்கையை மோடி நிராகரித்தார்...!


    சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமலுக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது. ஜிஎஸ்டி வெற்றியென பா.ஜனதா தரப்பில் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது. மறுபுறம் காங்கிரஸ் ஜிஎஸ்டி சாதாரண மக்கள் மீதான வரி சுமையை உயர்த்தியுள்ளது என விமர்சனம் செய்துள்ளது.   

    இந்நிலையில் சுயராஜ்யம் இணையதளத்துக்கு பேட்டியளித்து பேசியுள்ள பிரதமர் மோடி, சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகம் செய்து ஒரு ஆண்டை நிறைவடையும் நிலையில், மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதம் உயர்ந்துள்ளது. சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளது. 17 வரிகள், 23 கூடுதல்வரிகள் இணைக்கப்பட்டு ஒரேவரியாக மாற்றப்பட்டுள்ளன. உற்பத்தி வரி, சேவை வரி, வாட் வரி போன்றவை நீக்கப்பட்டு எளிமையான மறைமுகவரி அமல்படுத்தியுள்ளோம். இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை ஒழித்திருக்கிறோம். மாநில அரசுகள், வணிகர்கள் மற்றும் பிறர் தரப்பில் கொடுக்கப்பட்ட கருத்துக்களை கொண்டு வரிவிதிப்பு முறை சீரமைக்கப்பட்டு உள்ளது.
     
    ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் ஒரே மாதிரியான வரி என்பது சொல்வதற்கு எளிமையானதாக இருக்கும். ஆனால் உணவுப்பொருட்களுக்கு ஜீரோ வரிவிதிப்பு என்பதை கொண்டிருக்க முடியாது. பென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரேமாதிரி வரி இருக்க முடியுமா?

    காங்கிரஸ் கட்சியில் உள்ள நண்பர்கள் ஜிஎஸ்டி வரியில் ஒரு மாதிரியான வரிவிதிப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். அதை ஏற்கிறோம். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாலுக்கும், பணக்காரர்கள் பயன்படுத்தும் மெர்சடீஸ் பென்ஸ் காருக்கும் ஒரேமாதிரியான வரிவிதிக்க முடியுமா? ஜிஎஸ்டி வரியில் உணவுப்பொருட்கள் பலவற்றுக்கு வரியின்றி, சிலவற்றுக்கு 5 சதவீதமும், சில பொருட்களுக்கு 18 சதவீதமும் விதித்துள்ளோம். அனைத்து உணவுப்பொருட்களுக்கும் ஒரேமாதிரியான வரி விதிக்கவில்லை.

    சுதந்திரம் பெற்றதில் இருந்து 66 லட்சம் வரிசெலுத்துவோர்தான் இருந்தனர். ஆனால், ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து 48 லட்சம் நிறுவனங்கள் புதியதாக இணைந்து உள்ளது. இதுவரை 350 கோடி இன்வாய்ஸ், 11 கோடி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையைப் பார்த்தால், ஜிஎஸ்டி வரி குழப்பமானதாக தெரிகிறதா? நாடு முழுவதும் மாநிலங்களின் எல்லையில் இருந்த சோதனை சாவடிகள் அகற்றப்பட்டுள்ளது. அங்கு வாகனங்கள் வரிசையாக நிற்கத்தேவையில்லை. இதனால், லாரி ஓட்டுநர்களின் நேரம் மிச்சமாக்கப்பட்டுள்ளது. பொருட்களை உரியநேரத்தில் கொண்டு சேர்க்க முடியும், நாட்டின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

    400 வகையான பொருட்களின் வரியை குறைத்து உள்ளோம். 150 வகையான பொருட்களுக்கு வரியை நீக்கியுள்ளோம். இதனால், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பலபொருட்களின் விலை குறைந்துள்ளது என கூறியுள்ளார். 

    புதுடெல்லி,
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரேமாதிரி வரி ஜிஎஸ்டியில் முடியாது காங்கிரஸ் கோரிக்கையை மோடி நிராகரித்தார்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top