• Latest News

    Thursday, July 26, 2018

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது: காவேரி மருத்துவமனை...!


    திமுக தலைவர் கருணாநிதியின்  உடல் நலத்தில் வயதின் காரணமாக  நலிவு ஏற்பட்டுள்ளது என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. கருணாநிதியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை  பார்க்க யாரும் நேரில் வரவேண்டாம் எனவும் கருணாநிதிக்கு சிறுநீரகப்பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக காய்ச்சல் வந்துள்ளது.

     காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கருணாநிதியின் வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது: காவேரி மருத்துவமனை...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top