• Latest News

  Thursday, July 26, 2018

  முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரீஆவுக்குட்பட்ட திருத்தத்தையே கோருகிறோம்...!  முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபா­ரிசுக் குழுவில் ஷரீஆ சட்­டத்­துக்கு உட்­பட்­ட­தா­கவே எமது சிபா­ரி­சு­களை முன்­வைத்தோம். அந்த அடிப்­ப­டை­யி­லேயே அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எமது கருத்­துகள் ஷரீ­ஆ­வுக்கு முர­ணாக அமை­ய­வில்லை. ஒன்­பது வரு­டங்­க­ளாக இடம்­பெற்று தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை மீண்டும் கலந்­து­ரை­யாட வேண்­டிய தேவை­யில்லை.
  இதை சட்­ட­மூ­ல­மாக்­கு­வது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும் என முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபா­ரிசு குழுவின் உறுப்­பி­னரும் பெண்கள், அமைப்பின் பிர­தி­நி­தி­யு­மான சட்­டத்­த­ரணி சபானா குல் பேகம் தெரி­வித்தார்.

  நேற்று மாலை கொழும்­பி­லுள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலை­யத்தில் (WERC) நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;

  "கடந்த 8 வரு­டங்­க­ளாக இந்தக் குழுவில் கட­மை­யாற்­றிய அனு­பவம் எனக்கு இருக்­கி­றது. காதி நீதி­மன்­றங்­க­ளி­லி­ருந்து மேன்­மு­றை­யீட்­டுக்கு வரும் வழக்­கு­களில் நான் ஆஜ­ரா­கிய அனு­ப­வ­முண்டு.

  2018 ஆம் ஆண்­டு­வரை சுமார் எட்டு வரு­டங்­க­ளாக பல சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் பணி­யாற்றி அறிக்­கையை கடந்த ஜன­வரி மாதம் நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளித்தோம். இந்த அறிக்­கையில் ஒரு சில விட­யங்­களில் மாத்­திரம் வேறு­பட்ட கருத்­துகள் காணப்­ப­டு­கின்­றன.

  நாம் அதி­க­மா­னோ­ரோடு மற்றும் உல­மாக்கள், இஸ்­லா­மிய தத்­து­வ­வி­ய­லா­ளர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். இஸ்­லா­மிய நாடு­களின் சட்­டங்­களை, இஸ்­லா­மிய நூல்­களைப் படித்தே இந்த அறிக்­கையைத் தயா­ரித்தோம். துர­திஷ்­ட­வ­ச­மா­கவே சில வித்­தி­யா­ச­மான கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. நாம் முன்­வைத்த கருத்­துகள் எவை­யாக இருந்­தாலும் நாம் ஷரீ­ஆ­வுக்கு முர­ணாக செல்­ல­வில்லை.

  அறிக்­கை­யி­லுள்ள சிபா­ரி­சுகள் அனைத்தும் ஷரீ­ஆ­வுக்கு உட்­பட்­ட­தா­கவே அமைந்­துள்­ளன. நாட்டில் சட்­டங்கள் மக்­க­ளுக்கு தீர்வு நிவா­ரணம் வழங்கக் கூடி­ய­தா­கவே அமை­ய­வேண்டும். எமது சிபா­ரி­சுகள் ஷரீ­ஆ­வுக்கு உட்­பட்­ட­னவே.
  கடந்த 19 ஆம் திகதி குழுவின் தலைவர் சலீம் மர்சூப் எமது அறிக்­கையின் விளக்­கங்­களை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார். அறிக்­கையின் இரு கருத்­து­க­ளையும் விளக்­கி­யுள்ளார். 
  அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பத்வா குழு­வுடன் நாங்கள் பல தட­வைகள் கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். இந்த அறிக்­கையை தயா­ரிப்­ப­தற்கு முன்பு இந்த கலந்­து­ரை­யாடல் நடை­பெற்­றுள்­ளது.
  இன்று அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்ளும் சந்­திப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. நாம் பல­முறை பத்வா குழுவைச் சந்­தித்­துள்ளோம். அப்­ப­டி­யி­ருக்­கும்­போது ஏன் மீண்­டு­மொரு சந்­திப்பு.

  9 வரு­டங்­க­ளுக்கு முற்­பட்ட காலத்­துக்கு நாம் மீண்டும் செல்­ல­வேண்­டுமா என்ற கேள்வி இங்கு எழு­கி­றது. அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டு­விட்­டது இதனை சட்­ட­மாக்­கு­வது, சட்­ட­மூ­ல­மாக்­கு­வது, விவா­திப்­பது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். சட்ட வரைபு திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பு­வது என்­பது தான் மீத­மாக இருக்­கி­றது. இந்­நி­லையில் உலமா சபை­யுடன் மீண்டும் ஏன் இந்தக் கூட்டம் என்­பது கேள்­வி­யாக இருக்­கி­றது.

  உலமா சபை கலந்துகொள்ளும் கூட்டத்துக்கு முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளலாம் என்றால், பெண்களும் கலந்துகொள்ளமுடியாதா என்ற கேள்வி எழுகிறது. பெண்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை என்றார்.

  நிகழ்வில் ஜுவைரியா முகைதீன், சட்டத்தரணி எரிமிசா டிகல், சட்டத்தரணி ஹசனா சேகு இஸ்ஸதீன், நஸ்ருதீன் ரம்ஸியா ஆகியோர் உரையாற்றினர்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரீஆவுக்குட்பட்ட திருத்தத்தையே கோருகிறோம்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
  Scroll to Top