• Latest News

    Monday, August 20, 2018

    கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை -வானிலை மையம்...!


    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கேரளத்தில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்துவிட்டது. இதனால் கேரளத்தின் 13 மாவட்ட மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். வீடு, உடைமைகளை இழந்து அவர்கள் இருக்க இடம் கூட இல்லாமல் மாற்று துணி கூட இல்லாமல் இருந்து வருகின்றனர். 

    சுமார் 360-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை பெய்த மழையின் அளவு கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இந்த 80 நாட்களில் சுமார் 2,346 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை காட்டிலும் 42 சதவீதம் அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கேரள மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை  திரும்ப பெறப்பட்டுள்ளது.

    அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை -வானிலை மையம்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top