• Latest News

    Thursday, August 2, 2018

    மெக்ஸிகோ விமான விபத்தில் 85 பேர் காயம்...!


    மெக்ஸிகோ தலைநகரிலுள்ள டுராங்கோ (Durango) மாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், கிட்டத்தட்ட 85 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனக் கூறப்படுகின்றது.

    101 பேர் பயணித்த இந்த விமானம் விபத்துக்குள்ளானதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என ஆளுநர் ஜோஸ் ஐஸ்பரோ (José Aispuro) தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

    மெக்ஸிகோவின் கௌடலுபே விக்டோரியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AM 2431 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

    முன்னைய தகவல்களின் படி, சீரற்ற காலநிலையே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக Grupo Aeroportuario Centro Norte விமான நிலைய இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    விமானம் விபத்துக்குள்ளானதன் பின்னர் அதில் தீ ஏற்பட்டதாகவும் ஆனால், எவருக்கும் எரிகாயங்கள் ஏற்படவில்லை எனவும் சிவில் பாதிகாப்பு பேச்சாளர் அலெஜான்ட்ரோ கார்டோஸா (Alejandro Cardoza) தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மெக்ஸிகோ விமான விபத்தில் 85 பேர் காயம்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top