• Latest News

    Wednesday, August 22, 2018

    வெனிசுலாவில் 7.3, வனுவாட்டு தீவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்....!


    தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் 7.3 ரிக்டர் அளவில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    வெனிசுலாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

    1900 ஆம் ஆண்டிற்குப் பிறகு வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே இதுதான் சக்திவாய்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கொலம்பியாவின் தலைநகர் பொகோடாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    123 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    எனினும், அங்கு கைவிடப்பட்டிருந்த 45 மாடிகளைக் கொண்ட டவர் ஆஃப் டேவிட் கட்டிட மேற்கூரை இடிந்து வீழ்ந்துள்ளது.

    இதேவேளை, வனுவாட்டு தீவு பகுதிகளில் ஒன்றான ஆம்ப்ரிம் தீவின் வடக்கே சில கிலோ மீட்டர்கள் தொலைவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு தெற்கே 190 கிலோமீட்டர்கள் தொலைவில் போர்ட் வில்லா நகரில் வனுவாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகம் அமைந்துள்ளது.

    குறித்த அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் 15 முதல் 30 விநாடிகள் நிலநடுக்கத்தினை உணர்ந்ததாகக் கூறியுள்ளனர்.

    சேதங்கள் எவையும் பதிவாகவில்லை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வெனிசுலாவில் 7.3, வனுவாட்டு தீவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்....! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top