• Latest News

    Wednesday, August 29, 2018

    வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? - விமானத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்...!


    நீங்கள் வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா அல்லது செய்து கொண்டிருக்கும் பணியை விட சிறந்த வேலைக்காக காத்திருக்கிறீர்களா? அப்படியானால் விமான போக்குவரத்து துறையில் பணி தேடலாம்.

    நீங்கள் வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா அல்லது செய்து கொண்டிருக்கும் பணியை விட சிறந்த வேலைக்காக காத்திருக்கிறீர்களா? அப்படியானால் விமான போக்குவரத்து துறையில் பணி தேடலாம்.
    வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? - இந்த கட்டுரை உங்களுக்கானதுதான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
    ஆம், ஆசியா பசிஃபிக் பகுதியில் மட்டும் விமான போக்குவரத்து துறையில் 5 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் இருபது ஆண்டுகளில் உருவாகும் என போயிங் ஃபோர்காஸ்ட் நிறுவனம் கணித்துள்ளது.
    சீனாவும் விமான போக்குவரத்தும்
    ஆசிய பசிஃபிக் பகுதியில் உள்ள நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்தப் பகுதியில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 2037 ஆம் ஆண்டுக்குள் இந்தப் பகுதியில் 240,000 பைலட் தேவைப்படுவார்கள் என கணிக்கிடுகிறது போயிங் ஃபோர்காஸ்ட் நிறுவனம். அதுபோல 317,000 விமான பணியாளர்களும் தேவைப்படுவார்கள் என்கிறது.
    வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? - இந்த கட்டுரை உங்களுக்கானதுதான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
    இதில் சரி பாதியினர் சீனாவுக்கு மட்டுமே தேவைப்படுவார்கள் என்று விவரிக்கிறது அந்நிறுவனம்.
    Presentational grey line
    Presentational grey line
    விமான போக்குவரத்து துறையில் போதுமான விமானிகள் இல்லை மற்றும் விமானிகளுக்கான பயிற்சி நிறுவனங்களும் தேவையான அளவு இல்லை. இப்படியான சூழ்நிலையில் விமானிகளின் தேவை அதிகரித்துள்ளது.
    அதுமட்டுமல்லாமல், விமான போக்குவரத்து துறைக்கு வந்தவர்களில் பலர் அடுத்த பத்தாண்டுகளில் ஓய்வுப் பெற இருக்கிறார்கள். இதுவும் விமானிகளின் தேவையை அதிகரித்து இருக்கிறது.
    ஹெலிகாப்டர் சுற்றுலா
    இப்போது ஹெலிகாப்டர் சுற்றுலா அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கூட இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா வந்துவிட்டது. அதாவது வான்வெளியிலிருந்து நகரத்தை, மலை பகுதிகளை சுற்றுலா பயணிகளுக்கு காட்டுவது. இதற்காகவும் விமானிகள் தேவைப்படுகிறார்கள் என்கிறது போயிங்.
    விமான போக்குவரத்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
    சீனாவுக்கு மட்டும் 128,500 விமானிகளும், தென் கிழக்கு ஆசியாவுக்கு 48, 500 விமானிகளும், மற்றும் தெற்கு ஆசியாவுக்கு 42,750 விமானிகளும் தேவைப்படுவார்கள் என்கிறது போயிங்.
    சிக்கல்கள்
    விமான போக்குவரத்து ஆசிய பசிஃபிக் பகுதியில் மிகப்பெரிய வளர்ச்சியை பெரும் என்றாலும் இந்தத் துறையில் உள்ள சிக்கல்களையும் பட்டியலிடுகிறது போயிங்.
    குறிப்பாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்குமான வணிக யுத்தம் விமான உற்பத்தி செலவை அதிகரிக்கும் என்கிறார் போயிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டெனிஸ்.
    அதுபோல, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் விமான போக்குவரத்து பணியாளர்கள் சங்கம் மிக வலுவாக இருக்கிறது. ஊதிய உயர்வு மற்றும் இதர பணி பலன்கள் கோரி அங்கு நடக்கும் போராட்டம் இந்த துறைக்கு சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? - விமானத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top