• Latest News

    Thursday, August 16, 2018

    சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தத் தீர்மானம்...!


    சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தைத் தயாரிப்பதாக, வாழ்க்கை செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

    இதற்கமைய, உலக சந்தையில் எரிவாயுவிற்கு காணப்படும் கேள்விக்கமைய, விலை சூத்திரத்தினூடாக விலை நிர்ணயிக்கப்படவுள்ளது.

    சமையல் எரிவாயு நிறுவனங்களினூடாக எரிபொருட்களின் விலை அதிகரிப்பது தொடர்பில் கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தத் தீர்மானம்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top