• Latest News

    Friday, September 28, 2018

    சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால், அப்போதே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - தேர்தல் ஆணையம்...!


    பதவி காலங்களுக்கு முன்னதாக சட்டமன்றங்கள் கலைக்கப்படும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தன்னுடைய உத்தரவை பிறப்பித்துள்ளது. 

    சட்டமன்றம் கலைக்கப்பட்டதும் புதிய தேர்தல் நடைபெறும் வரையில் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி முன்கூட்டியே கலைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் 1994–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


    கடந்த 1994–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், காபந்து அரசு நிர்வாக பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும், முக்கிய கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக்கூடாது என்றது. தேர்தல் ஆணையம் தன்னுடைய உத்தரவை மத்திய மந்திரிசபை செயலாளருக்கு தேர்தல் கமி‌ஷன் அனுப்பியுள்ளது. 

    சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும், அப்போது நிர்வாக பொறுப்பை கவனிக்கும் காபந்து அரசோ அல்லது மத்திய அரசோ புதிதாக திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது என்று தேர்தல் கமி‌ஷன் தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால், அப்போதே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - தேர்தல் ஆணையம்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top