• Latest News

    Friday, September 21, 2018

    தேசிய நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின்வாங்காது - பிரதமர் மோடி...!


    டெல்லியில் 22,000 கோடி செலவில் கட்டப்பட உள்ள சர்வதேச கருத்தரங்கம் மற்றும் பொருட்காட்சி மையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:

    நாட்டில் தற்போது விற்பனை ஆகும் செல்போன்கள் 80 சதவிகிதம் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றது. இதன் மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் கோடி அன்னிய செலாவணி மிச்சமாகிறது.

    தகவல் தொழில் நுட்பம் மற்றும் சில்லறை வர்த்தக துறையில் வேலைவாய்ப்பு பெருகி வருகிறது. மேலும் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதனால் அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்காகி 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை எட்ட முடியும்.

    தேசிய நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது. மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேசிய நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின்வாங்காது - பிரதமர் மோடி...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top