• Latest News

    Saturday, September 22, 2018

    மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் உணவு விஷமாகியதால் பணியாளர்கள் வைத்தியசாலையில்...!


    மினுவாங்கொட பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் உணவு விஷமடைந்ததால், பணியாளர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 120க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மினுவங்கொட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சிசிர விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அனுமதிக்கப்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

    இந்தச் சம்பவம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் உணவு விஷமாகியதால் பணியாளர்கள் வைத்தியசாலையில்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top