• Latest News

    Monday, September 17, 2018

    மத்திய பிரதேசத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை துவங்குகிறார் காங். தலைவர் ராகுல் காந்தி...!


    பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு பாஜக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி உள்ளது. 

    அடுத்த ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய நான்கு மாநில சட்டப் பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. 

    எனவே, இந்த சட்டப் பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதிலும் பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மத்தியப் பிரதேசத்தில் வெற்றி பெற காங்கிரஸ் கூடுதல் முனைப்பு காட்டி வருகிறது.

    இந்த சூழலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்குகிறார். பிரசாரத்துக்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலுக்கு வரும் ராகுல் காந்தி, போபாலில் திறந்த வாகனத்தில் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து கட்சியினருடன் உரையாடும் அவர், பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேச இருக்கிறார். 

    அவரை வரவேற்கும் வகையில் வழி நெடுகிலும் தோரணங்கள், பதாகைகளை காங்கிரஸ் கட்சியினர் அமைத்துள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுக் கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மத்திய பிரதேசத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை துவங்குகிறார் காங். தலைவர் ராகுல் காந்தி...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top