• Latest News

    Saturday, October 27, 2018

    1000 ரூபா சம்பளம் நிச்சயம் கிடைக்கும்: ஆறுமுகம் தொண்டமான்...!



    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவோடு இணைந்து செயலாற்றத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.

    இந்த புதுக்கூட்டணிக்கு சிறுபான்மைத் தலைவர்கள் பலர் ஆதரவு கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் நேற்று (26) புதிய பிரதமரை சந்தித்துப் பேசியதாகவும், அப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக அவர் வாக்குறுதி வழங்கியதாகவும் ஆறுமுகம் தொண்டமான் கூறினார்.

    இதனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மைத்திரிபால சிறிசேனவிற்கும் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஆதரவு வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

    பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் நிச்சயம் கிடைக்கும் எனவும் உறுதிபடக் கூறினார்.

    மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 1000 ரூபா சம்பளம் நிச்சயம் கிடைக்கும்: ஆறுமுகம் தொண்டமான்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top