• Latest News

    Thursday, October 18, 2018

    அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது கனமழை பெய்யும்...!

     
    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொருத்தவரை கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி எடுத்த நிலையில், நேற்று பரவலாக மழை பெய்தது. 

    சென்னை வானிலைமையம் கூறியதாவது:-
     
    அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது கனமழை பெய்யும் . வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 7 செமீ மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 6 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 5 செமீ மழை பெய்துள்ளது. ஆம்பூர், வேலூர், பெரியகுளம் பகுதியில் தலா 4 செமீ மழை பதிவாகி உள்ளது.
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது கனமழை பெய்யும்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top