• Latest News

    Saturday, October 27, 2018

    பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும்; முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அழைப்பு...!


    டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணியில் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

    இந்த நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளனர்.

    இதுபற்றி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அ.தி.மு.க. ஆயிரம் காலத்து பயிர்.  தமிழர்களுக்கு நிம்மதி எனும் நிழல் தரும் ஆலமரம்.  நாம் ஒன்றுபட்டு உழைத்தால் அ.தி.மு.க. எனும் பேரியக்கம் புதிய புறநானூறு படைக்கும் ஆற்றல் பெற்ற இயக்கம் ஆக உருவெடுக்கும்.

    உயர் நீதிமன்ற தீர்ப்பு தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தினை தந்துள்ளது.  அ.தி.மு.க.வினருக்கும், தமிழக மக்களுக்கும் புத்துணர்வினை தந்துள்ளது.

    ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் இயக்கம் ஆக விஸ்வரூபம் எடுத்து அரசியல் எதிரிகளை அழிக்கும்.  அதனால், கட்சியில் இருந்து சில தவறான வழிநடத்துதலால் பிரிந்து சென்றவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மக்கள் இயக்கத்தில் மீண்டும் வந்து இணைய வேண்டும்.

    சிறு சிறு மனக்கசப்புகளால் மாற்று பாதையில் பயணிக்க சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும்.  எண்ண வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு ஒன்றுபட்டு உழைக்கும் இயக்கத்திற்கு திரும்ப வேண்டும்.

    நீர் அடித்து நீர் விலகாது என்பது முதுபெரும் தமிழ் பழமொழி அல்லவா?  உயர் நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தினை புரிந்து மாற்று பாதையில் சென்றோர் கட்சிக்கு திரும்புங்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும்; முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அழைப்பு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top