• Latest News

    Sunday, November 11, 2018

    கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி...!


    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இந்திய பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் முறையே 5 விக்கெட் மற்றும் 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரையும் இழந்து விட்டது. இந்த நிலையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்  இன்று நடைபெற்று வருகிறது. 

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் போரன் 53, டேரன் பிராவோ 43 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top