• Latest News

    Wednesday, September 16, 2020

    இந்தியாவில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்தது...!!


    ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,945க்கு விற்பனையாகிறது.

    கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.

    கடந்த மாதம் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தும் ஏற்றத்துடனும் காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ரூ.39,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.15 குறைந்து ரூ.4,945 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


    மேலும் இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71க்கு விற்பனையாகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்தியாவில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்தது...!! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top