• Latest News

    Monday, September 14, 2020

    ஊரடங்கு காலத்தில் பிஎஃப் சேமிப்பில் இருந்து ரூ.39,403 கோடி எடுத்த இந்திய மக்கள்: ரூ.4,985 கோடி எடுத்து தமிழகம் 3-வது இடம்.!!!


    நாடு முழுவதும் சிறு, குறு, பெருந்தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டு இபிஎப் அண்ட் எம்பி 1952 சட்டத்தின் கீழ் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் டெல்லியை தலைமையகமாக கொண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கிடையே, கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வந்தனர்.

    இதனால், சாமானிய மக்கள் தங்களது தேவைகளுக்கு, வருங்கால வைப்பு நிதி தொகையில் (பிஎப்) இருந்து 75 சதவிதத்தை ஒரு முறை எடுத்து கொள்ளலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இதற்காக, வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் பெறுவதற்கு Covid-19 என்ற முறையை மத்திய அரசு இணைத்துள்ளது. மற்ற முறைகளான திருமணம், நோய்வாய்படுதல், வீடு கட்டுதல் ஆகியவற்றின் மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் பெற 15 நாட்கள் ஆகிறது. இருப்பினும், Covid-19 என்ற முறையில் பணம் எடுத்தால் 3 நாட்களில் பெற மத்திய அரசு வழிவகை செய்திருந்தது.

    இதனைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தை எடுக்கத் தொடங்கினர். இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் வருங்கால வைப்பு நிதியில் இருந்து மக்கள் எவ்வளவு பணம் எடுத்துள்ளனர். எந்த மாநிலத்தில் அதிகம் எடுத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவலின்படி, மார்ச் 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இந்தியா முழுவதும் வருங்கால வைப்பு நிதியில் இருந்து 39,403 கோடி ரூபாய் பணத்தை மக்கள் எடுத்துள்ளனர்.

    பிஎஃப் சேமிப்பில் இருந்து பணத்தை எடுத்த மாநிலங்கள் பட்டியலில், 7,838 கோடி ரூபாயுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 5,744 கோடி ரூபாயுடன் கர்நாடகா 2-வது இடத்திலும், 4,985 கோடி பணம் எடுத்து தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் டெல்லி, ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்கள் உள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊரடங்கு காலத்தில் பிஎஃப் சேமிப்பில் இருந்து ரூ.39,403 கோடி எடுத்த இந்திய மக்கள்: ரூ.4,985 கோடி எடுத்து தமிழகம் 3-வது இடம்.!!! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top