• Latest News

    Tuesday, September 15, 2020

    இந்தியாவில் 50 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு; மாநில வாரியாக பாதிப்பு விவரம்...!


    கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பலனளிக்கவில்லை. 

    இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,809-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்,  1,054- பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

    இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கி  49 லட்சத்து 30 ஆயிரத்து 237- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 90 ஆயிரத்து 061-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 38 லட்சத்து 59 ஆயிரத்து 400 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

    கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்து 776- பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மராட்டியம் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளமாநிலமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 17,066 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதனால் மொத்த எண்ணிக்கை10,77,374 ஆக உள்ளது. 257 புதிய மரண மாநிலத்தில் பலி எண்ணிக்கை 29,894 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் கொரோனா தொற்று மீட்பு விகிதம் 70.16 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.77 சதவீதமாகவும் உள்ளது.

    செயலில் உள்ள பாதிப்புகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை மராட்டியம், கர்நாடகா மற்றும் ஆந்திரா, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் குவிந்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

    நன்றி: தினத்-தந்தி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்தியாவில் 50 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு; மாநில வாரியாக பாதிப்பு விவரம்...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top