• Latest News

    Saturday, September 19, 2020

    மனச்சோர்வடைந்த இளம் பெண்களுக்கான புதிய சிகிச்சை...!



     இன்றைய திகதியில் வளரிளம் பெண்கள் விளக்க இயலாத காரணங்களால் தீவிர மனச்சோர்வு அடைகிறார்கள். 

    இவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான சிகிச்சையில் புதிய முறை அறிமுகமாகி இருப்பதாகவும், அது நல்லதொரு பலனை வழங்குகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    இன்றைய சூழலில் இளம் பெண்கள் அதிலும் குறிப்பாக வளரிளம் பெண்கள் major depressive disorder என்ற மனச்சோர்வு நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.


    இவர்களுக்கு cognitive behaviour therapy என்ற சிகிச்சை வழங்கப்படுகிறது. 

    தோராயமாக 12 வார காலத்திற்கு 12 அமர்வுகளில் வழங்கப்படும் இந்த சிகிச்சையின்போது, இவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை நல்லதொரு பலனை வழங்குகிறதா? என்பதை அறிய தற்போது மூளையின் செயல்பாட்டினை சத்திரசிகிச்சையற்ற  பிரத்தியேக  பரிசோதனையின் மூலம் கண்டறியலாம்.

    இந்த பரிசோதனையின் முடிவைப் வைத்து அவர்களுக்கான சிகிச்சையை தொடரவோ அல்லது இடை நிறுத்தம் செய்யவோ அல்லது வேறு வகையான சிகிச்சையை வழங்கவோ தீர்மானிக்க இயலும். இந்த பரிசோதனையின் போது electroencephalography என்ற அளவீடு, மூளையின் செயல்பாட்டை மருத்துவ நிபுணர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கும். 

    இதன் மூலம் நோயாளிகளின் மனச்சோர்வை எளிதில் அகற்றி, அவர்களை இயல்பான மனநிலையில் செயல்பட வைக்கலாம் என்றும், இத்தகைய பாதிப்புக்கு காரணமான மூளையின் குறியீடுகளை துல்லியமாக அவதானிக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    டொக்டர் கோட்டீஸ்வரன்.

    தொகுப்பு அனுஷா.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மனச்சோர்வடைந்த இளம் பெண்களுக்கான புதிய சிகிச்சை...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top