உலகின் வயதான முதல்தர கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு...!
உலகின் மிகப் பழமையான முதல்தர கிரிக்கெட் வீரரான ஆலன் புர்கெஸ், தனது 100 ஆவது வயதில் (100 வயது மற்றும் 250 நாட்கள்) உறக்கத்திலிருந்தபோது உயிரிழந்துள்ளதாக நியூஸிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
புர்கெஸின் மகள் பிப்பை, தனது தந்தை இறுதிவரை நல்ல நிலையில் இருந்ததாகவும், செவ்வாயன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியை கிறிஸ்ட்சர்ச்சிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்ததாகவும் கூறினார்.
புர்கெஸ் 1920 மே மாதம் முதலாம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் பிறந்தார்.
வலது கை துடுப்பாட்டாளராகவும் இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் இருந்த அவர், 1940/41 முதல் 1951/52 வரை இங்கிலாந்தின் கேன்டர்பரிக்காக 11 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.
1945 ஆம் ஆண்டின் இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஆலன் புர்கெஸ் கிரக்கெட் சேவைகளுக்காக நியூஸிலாந்துக்கு திரும்பினர்.
புர்கெஸின் கிரிக்கெட் வாழ்க்கை 1940 இல் கிறிஸ்துமஸ் தினத்தன்று தொடங்கியது, மேலும் அவர் ஒடாகோவுக்கு எதிரான போட்டியில் 52 க்கு 6 விக்கெட்டுகளையும் 51 க்கு 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்.
No comments