எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் இந்தியாவில் கொவிட் - 19 தடுப்பூசி...!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி மாதம் 16 ஆம் திகதி அன்று தொடங்கும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போடுவதில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்கள் 3 கோடி பேர் வரை இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு கீழே இருந்தாலும் இணை இடர்ப்பாடுகள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும். இந்தப் பிரிவில் 27 கோடி மக்கள் வருவார்கள் என்று இந்திய அரசு மதிப்பிட்டுள்ளது.
கோவிஷீல்ட் (ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனெகா), கோவேக்சின் (பாரத் பயோடெக்) ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசரப் பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10,431,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 150,798 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments