இறுதி சடங்கில் கலந்துகொண்ட 23 பேர் உயிரிழப்பு...!
இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் முராத்நகரில் உள்ள தகன மயானத்தில் அமைந்துள்ள தங்குமிடம் ஒன்றின் கூரை இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 23 பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் காயமடைந்தும் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர்வாசியொருவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பெரும்பாலான மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த மயானத்திற்கு வந்திருந்தனர்.
இதன்போது தொடர்ந்து பெய்த அடை மழைக் காரணமாக இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பலர் கட்டிடத்திற்குள் ஒதுங்கியுள்ளனர். இதன்போதே கூரை இடிந்து வீழ்ந்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கிய 23 பேர் உயிரிழந்ததுடன், ஏனைய 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டும் உள்ளனர். அதேநேரம் மீட்புப் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் இந்திய ரூபாவில் தலா 2 இலட்சம் நிதி உதவி வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
குடியசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தும் இந்த சோகம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
No comments