மாயமான இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டுபிடிப்பு...!
இந்தோனேசியாவில் காணாமல் போன பயணிகளின் விமான பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் காணாமல் போனதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் ஸ்ரீவிஜயா நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 பயணிகள் விமானம், ஜகார்த்தாவில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில், கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. அந்த விமானம் கடலில் விழுந்து விபத்தற்குள்ளானதாக தகவல் வெளியானது.
130 பேர் பயணம் செய்யக்கூடிய அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்ற தகவல் ஏதும் இல்லை. ஜகார்த்தாவின் சுகர்னோ ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அந்த விமானம், போர்னியோ தீவில் உள்ள போன்டியானக் என்ற இடத்திற்கு சென்றது. 90 நிமிடங்களில் அந்த இடத்திற்கு செல்ல வேண்டிய விமானத்தின் நிலை குறித்து விசாரணை நடத்தி வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து மறைந்ததாக தெரிகிறது.
இதனிடையே, ஜகார்த்தா அருகே கடல் பகுதியில் விழுந்து, அந்த விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலரின் உடல்களும், விமானத்தின் உதிரி பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவின் தேடுதல் மற்றும் மீட்பு முகமை, தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிஷனும், விமானம் மாயம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
கடந்த 2018 ம் ஆண்டு பயணிகள் விமானம் ஒன்று, ஜாவா கடல் பகுதியில் விழுந்ததில், 189 பேர் உயிரிழந்தனர் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,இந்தோனேசியாவில் காணாமல் போன பயணிகளின் விமான பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
No comments