தென் கொரிய கொடியேற்றப்பட்ட கப்பலை கைப்பற்றியது ஈரான்...!
சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி பயணித்தபோதே தென்கிழக்கில் ஓமான் குடாவையும், தென்மேற்கில் பாரசீகக் குடாவையும் கொண்ட ஹோர்முஸ் நீரிணையில் வைத்து இந்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க பொருளாதாரத் தடைகள் காரணமாக தென் கொரிய வங்கிகளில் முடக்கப்பட்ட ஈரானிய நிதி தொடர்பாக தெஹ்ரானுக்கும் சியோலுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு இடையே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஓமானுக்கு வெளியே உள்ள கடற்பரப்பில் ஈரானிய அதிகாரிகள் தென் கொரிய இரசாயன கப்பலை பறிமுதல் செய்ததை சியோல் உறுதிசெய்துள்ளதுடன், அதை உடனடியாக விடுவிக்கும்படியும் கோரியுள்ளது.
வளைகுடாவை இரசாயனங்கள் மாசுபடுத்தியதற்காக குறித்த கப்பலைக் கைப்பற்றியதாக அரசு தொலைக்காட்சி உட்பட பல ஈரானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
7,200 தொன் எத்தனாலை கொண்டு செல்லப்பயன்படுத்திய ஹான்குக் செமி என்ற இந்த கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையினர் கைப்பற்றி கொண்டு செல்லும் புகைப்படங்கனை தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்களில் தென் கொரியா, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.
ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுக நகரலில் தற்போது கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த கப்பலில் 20 பணியாளர்கள் இருந்தனர் என்று தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறையும் உடனடியாக கப்பலை விடுவிக்குமாறு ஈரானிடம் வலியுறுத்தியுள்ளது.
Share From: www.virakesari.lk
No comments