Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

முல்லைக் கடலில் கைதான தமிழக மீனவர் 10 பேருக்கு விளக்கமறியல்...!


செப். 06 ஆம் திகதி வழக்கு

முல்லைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும் செப்டம்பர் மாதம் 06 வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் மீனவர்கள் 10 பேரையும் நேற்று (23) மாலை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைதீவு கடற்பரப்பில் 22 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் கடற்படையினரின் சுற்றிவளைப்பில் பத்து மீனவர்களும் படகுடன் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்படும் போது மீனவர்களுடைய மீன்களை மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற் படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மீன்பிடி திணைக்களத்தினர் நேற்று ஆஜர் படுத்தியதுடன் எதிர்வரும் ஆறாம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்தியா நாகப்பட்டினம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகின்றது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments