Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

காத்தான்குடி கராத்தே வீரர் மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு...



விளையாட்டுத்துறை அமைச்சினால் ஆண்டு தோறும் நடாத்தப்படும் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான, மாவட்ட மட்ட கராத்தே போட்டி மட்டக்களப்பு வெபர் மைதான உள்ளக விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் 50kg-55kg எடை Kumite பிரிவில், சோட்டோ கான் கராட்டே அமைப்பின், மட்டக்களப்பு கிளை சார்பாக போட்டியிட்ட காத்தான்குடியை சேர்ந்த கராத்தே வீரர் உவைஸுர் றஹ்மான் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை வெற்றியீட்டியதுடன் மாகாண மட்ட கராத்தே போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஜவ்பர் அவர்களின் புதல்வரும் காத்தான்குடி அல்ஹிறா மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.பஹ்த் ஜுனைட்- காத்தான்குடி நிருபர்)

Post a Comment

0 Comments