Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சீனாவில் கடும் வரட்சியால் மின் விநியோகத்தில் தடை…!

 


சீனாவில் மின்சாரத் தடையால் 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அதிகரித்துள்ள வெப்பநிலையால் மின்சார விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள தொழிற்சாலைகளும் வர்த்தகங்களும் மூடப்பட்டுள்ளன.

சிச்சுவான் மாநிலத்தில் கடந்த புதனன்று (17) வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியது. வீடுகள், அலுவலகங்கள், கடைத்தொகுதிகள் ஆகியவற்றுக்கு மின்சாரத்தைப் பங்கீட்டு முறையில் விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எரிசக்தியை அதிகம் பயன்படுத்தும் உலோக, உரத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அவற்றின் செயல்பாட்டைக் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

சீனாவில் அதிகரிக்கும் வெப்பநிலையால் பயிர்களின் விளைச்சலும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. யாங்சே ஆற்றைச் சுற்றிய பகுதிகளில் வரட்சி ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments