Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் திருப்தியடைய முடியாது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...!

 

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளதாகவும், இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் திருப்தியடைய முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (30) நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்ப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வரவு செலவுத் திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல் தொடர்பில் இணங்க முடியாது. யுனிசெப் அறிக்கையில் தாய்மார், பிள்ளைகள் எந்தளவுக்கு பாதுகாப்பற்ற முறையில் இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிபரத்தை ஒதுக்கிவிட்டு, 61 ஆயிரம் குடும்பங்கள் வரையிலேயே தற்போதைய நெருக்கடி நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, அவரின் உரையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் புள்ளி விபரங்கள் தொடர்பில் பெரும் பிரச்சினைகள் உள்ளன.

பொருளாதார நெருக்கடியால் நாட்டில் பெருமளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தை செயற்படுத்திச் செல்ல வேண்டுமாயின் மக்களின் நலன்புரிகள் மற்றும் அபிவிருத்திகளுக்காக இதற்கும் மேலான நிதியை ஒதுக்க வேண்டும்.

அவ்வாறான எதுவும் இதில் இல்லை. அதனால் இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எமக்கு திருப்தியடைய முடியாது உள்ளது என்றார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments