Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

டால்கம் பவுடர் தயாரிப்பு, விற்பனையை நிறுத்துகிறது ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம்...!



தனது டால்கம் பேபி பவுடர் தயாரிப்பு மற்றும் விற்பனையை அடுத்த வருடம் நிறுத்தவுள்ளதாக அமெரிக்காவைத் தளமாக்ககொண்ட பல்தேசிய நிறுவனமான ஜோன்சன் அன்ட் ஜோன்சன், அறிவித்துள்ளது.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson ) நிறுவனத்தின் பேபி பவுடரை பயன்படுத்தியதால் தமக்கு சூலகப் புற்றுநோய் ஏற்பட்டதாக ஆயிரக்கணக்கான பெண்கள் வழக்குத் தொடுத்திருந்தனர்.

இப்பவுடரிலுள்ள அஸ்பெஸ்டஸ் தமக்கு சூலகப் புற்றுநோயை ஏற்படுத்துவதாக அவர்கள் குற்றம் சுமத்திருந்தனர்

ஆனால், தனது டால்கம் பவுடரில் அஸ்பெஸ்டஸ் இல்லை எனவம், அப்பவுடர் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானது எனவும் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் தெரிவித்திருந்தது.

2000 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இப்படவுர் விற்பனையை நிறுத்துவதாக ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்நிறுவனம் வியாழக்கிழமை (11) விடுத்த அறிக்கையொன்றில், உலகளாவிய ரீதியில் தனது டால்கம் பவுடர் தயாரிப்பு மற்றும் விற்பனையை 2023 ஆம் ஆண்டுடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

தனது பேபி பவுடர்கள் அனைத்தையும் சோளமாவு அடிப்படையிலானதாக மாற்றுவதற்கு வணிக ரீதியிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சோளமாவு அடிப்படையிலான பேபிபவுடர்களை ஏற்கெனவே பல நாடுகளில் தான் விற்பனை செய்துவருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், தனது டால்கம் பவுடர்கள் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானவை என இந்நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

டால்க் (Talc) என்பது மக்னீசியமும் சிலிக்கானும் சேர்ந்துள்ள ஒரு மென்மையான (மெதுமையான) கனிமம். பார்ப்பதற்கு வெண்மையாக இருக்கும். இரசாயனவியலில் இதனை நீர்சேர்ம மக்னீசிய சிலிக்கேட் என்று கூறுவர்.

Post a Comment

0 Comments